பிக்பாஸில் சிங்கப்பெண்ணாக மாறிய ஷிவின்! கதறி அழ காரணம் என்ன?

0
496

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவின் கமல்ஹாசன் முன்பு கதறி அழுதுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களில் மைனா நந்தினி, ஏடிகே இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இதில் அமுதவானன் நேரடியாக ஃபைனலுக்கு சென்றுள்ளார். இன்று 100வது நாள் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் பல நெகிழ்ச்சியான கேள்வியிகளை போட்டியாளர்களிடம் முன்வைத்துள்ளார்.

இதில் அனைவரும் உணர்ச்சி பொங்கும் பதிலை அளித்துள்ள நிலையில், பிக்பாஸின் இந்த சீசனின் சிங்கப்பெண்ணாக ஷிவின் இருக்கின்றார்.

ஷிவின் இன்றைய நிகழ்ச்சியில் கமல் முன்பு கதறி அழுது, தனது பதிலைக் கூறியுள்ளது பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.