5 ஆவது முறையாக பங்களாதேஷின் பிரதமர் பதவி வென்ற ஷேக் ஹசீனா..

0
213

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஐந்தாவது தடவை

அத்துடன், பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 152 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், கட்சி ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டிவிட்டதால் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அதேவேளை, அவர் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதுடன் பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்பது ஐந்தாவது தடவையாகும்.