இலங்கைக்கு வருகின்றார் சாந்தன்; 32 வருட தாயின் காத்திருப்புக்கு கிடைத்த பலன்!

0
183

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகத்தினால் சாந்தனுக்கு குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

32 வருடகால காத்திருப்பு

32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர் சாந்தன் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அதேவேளை விடுதலைக்கு 32 வருடகாலமாக யாழ்ப்பாணத்தில் காத்திருக்கும் சாந்தனின் தாயார் தன் மகனை நாட்டுக்கு அழைத்துவர ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.