தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
இதன்படி, ஷான் விஜயலால் அம்பலாங்கொடையின் பிரதம அமைப்பாளராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷான் விஜயலால் கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்.
இதனிடையே, காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.