இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சேவை விரைவில் ஆரம்பம்!

0
504

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மாநில பேரவையில் உரையாற்றிய போதே புதுச்சேரி முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காரைக்கால் துறைமுகத்துக்கும், காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.