இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தில் செந்தில் தொண்டமான்

0
34

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்ற பி.ராதாகிருஷ்ணனின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்திய ஜனாதிபதி செயலகத்தின் அழைப்பின் பேரில் அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி மூர்மு முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.