யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்.
மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (29) இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டில் வழுக்கி விழுததை அடுத்து (28) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் அவர் சற்று நேரத்துக்கு முன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசியகட்சிகள் மாவை சேனாதிராஜாவை காண மருத்துவமனைக்கு படையெடுத்ததாக கூறப்படுகின்றது.
