மனித பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் விற்பனை!

0
651

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படாமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை | Selling Harmful Cosmetics Lanka

தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகளவான தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை | Selling Harmful Cosmetics Lanka

இந்நிலையில் , துறைசார் அதிகாரசபையின் அங்கீகாரம் பெற்ற பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.