விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை கடன்..

0
185

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இரண்டாம் தவணை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப இரண்டாவது தவணையை ஒரே தடவையில் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கினால் அது ஆச்சரியமான நிலைதான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

இதேவேளை, மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய மற்றும் உருவாக்கப்பட வேண்டிய நிலைமைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதற்கமைய, அதற்கான தவணை தொகை மிக விரைவில் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.