லியோ ட்ரைலரில் சீரியல் கில்லராக வரும் சாண்டியின் அட்டகாசமான நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ 19ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கில்லி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சாண்டி, லியோ படத்தில் சைக்கோவாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் படத்தின் கதாசிரியரான ரத்னா தனது சமூக வலைத்தளப்பத்தில் சாண்டியின் சீரியல் கில்லர் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை ஷேர் செய்து பிக் பாஸில் சாண்டி மாஸ்டர் பெற்றிருந்த பெண் ரசிகைகளையும் குழந்தை ரசிகர்களையும் மிரட்டி விடுவார் என தெரிகிறது என பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தினை மிரட்டி வருகின்றது.