அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்குமாறு சனத் ஜயசூரிய கோரிக்கை!

0
798

20வது திருத்தத்தை ஒழிப்பதுதான் அரசாங்கத்தின் நேர்மையை தீர்மானிப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள அவர் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் இன்னமும் வரிசைகளில் அவலப்படுகின்றனர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் இதுபோதும் என்று நினைத்து மக்களின் துன்பங்களை தயவு செய்து மறந்துவிடாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.