மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளார்.
சம்பத் மனம்பேரி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரியின் சகோதரர் ஆவார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது