எக்ஸ் செயலியின் கொள்கைப் பரப்பு தலைவர் பதவியில் இருந்து சமிரன் குப்தா பதவி விலகல்

0
274

சமூக ஊடக வலைத்தளமான எக்ஸ் செயலியின் இந்திய மற்றும் தெற்காசியாவுக்கான கொள்கைப் பரப்பு தலைவர் பதவியில் இருந்து சமிரன் குப்தா பதவி விலகியுள்ளார்.

எக்ஸ் நிறுவனத்திலிருந்து சமிரன் குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் தற்போது எக்ஸ் செயலியை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 27 மில்லியனாக உள்ளது.

கடந்த வாரம் எக்ஸ் நிறுவன தலைவர் ஈலோன் மஸ்க், எக்ஸ் செயலி பயனாளர்களிடம் இருந்து படங்களை பதிவேற்ற கட்டணம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தகது.