தனது திருமண உடையை வேறு விதமாக மாற்றிய சமந்தா: வெள்ளை நிறம் கறுப்பாக மாறியது எப்படி?

0
112

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021இல் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.

இவர்கள் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் நடிகை சமந்தா திருமணத்தின்போது வெள்ளை நிற வெட்டிங் கவுன் அணிந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது திருமண உடையை புதிதாக மாற்றியமைத்துள்ளார் சமந்தா. விருது விழாவொன்றில் நடிகை சமந்தா தனது திருமண கவுனை ரீ – யூஸ் செய்து அணிந்து வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு சிலர் சமந்தாவின் இந்தச் செயலை பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலர் என்னதான் இருந்தாலும் திருமண உடையை இப்படி மாற்றலாமா? என விமர்சித்து வருகின்றனர்.