பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் சம்பள உயர்வு போதாது..!

0
208

பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது குறிப்பாக தொழில் வல்லுநர்கள் குறைந்தபட்சம் அவர்கள் பெறும் தொழில்முறை கொடுப்பனவுகளை புதுப்பிக்க வேண்டும்.

என அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மருந்தாளுனர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையைப் பொறுத்தமட்டில், மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு தனியான சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் மற்றும் தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வக வசதிகளை அடுத்த வருடத்திற்கான அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தமை சாதகமான நிலைமைகளாக சுட்டிக்காட்டப்படலாம்  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.