ஊடகவியலாளர்கள் மீது கோபமடைந்த சஜித் பிரேமதாச

0
547

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர் தமிதா அபேரத்னவை காண எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமிதா அபேரத்ன போன்றவர்களை தற்போதைய அரசாங்கம் வேட்டையாடுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலு தெரிவிக்கையில் இன்று இளைஞர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். போராட்டத் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சிவில் சமூகம் வேட்டையாடப்படுகிறது. இது ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாது என்றார்.

நடிகைக்காக பரிந்துரை

குறிப்பாக தமிதா அபேரத்னவின் விரைவான விடுதலையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என தெரிவித்த அவர் இந்த வேட்டையை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.

ஊடகங்களிடம்  சீறிய சஜித் பிரேமதாச | Sajith Premadasa Angry With The Media

மேலும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் இதனபோது மேலும் தெரிவித்தார்.