ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த பதிவை செய்துள்ளார்.
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாது, ”ஈரானில் ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கையின் காரணமாக அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



