பௌத்தர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான ருவன்வெலிசாயவின் அத்திவாரத்தில் மாணிக்கக்கல் இருப்பதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பிய நபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ருவன்வெலிசாயவின் அத்திவாரத்தில் மாணிக்கக்கல் இருப்பதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டே குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கடந்த 16ஆம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தூண்ட முயற்சித்தமை மற்றும் ருவன்வெலிசாயவின் அப்போதைய மகாநாயக்க தேரருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தல் என இரு பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கிற்கு எதிராக 15 ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளதுடன் பத்து அரசு தரப்பு சாட்சியங்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி மற்றும் மே 31 ஆம் திகதிகளில் சமூக ஊடகமான யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்ட ‘ட்ரூத் வித் சாமுதிதா’ என்ற நிகழ்ச்சியிலேயே குறித்த விடயம் தொடர்பில் ஒளிபரப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.