ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்தார்.
இராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் இந்த சந்திப்பின்போது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா தனது வர்த்தக உறவுகள் குறித்த தீர்மானங்களை சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர்
ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளில் இந்தியா முற்றிலும் திறமையான வகையில் முடிவுகளை எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.