ரஷ்யா – உக்ரைன் போர்; போர்க்களம் செல்லும் பிரிட்டன் படையினர்

0
68

ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை பயன்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் (Keir Starmer) கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்ள பத்தியில் அவர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

இது பிரிட்டிஸ் படையினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதை நான் ஆழமாக உணர்கின்றேன் எனினும் உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவுவது என்பது எங்கள் கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது எனவும் பிரிட்டன் பிரதமர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.