195 போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ரஷ்யா – உக்ரைன்!

0
236

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இதேவேளை குறித்த போரில் இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. 

இவ்வாறான நிலையில் போர் நிறுத்தம் என்பது ரஷ்யாவுக்கு சாதகமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். மேலும் குறித்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

195 போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ரஷ்யா - உக்ரைன்! | Russia Ukraine To Exchange 195 Prisoners Of War

இதேவேளை, ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. 

195 போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ரஷ்யா - உக்ரைன்! | Russia Ukraine To Exchange 195 Prisoners Of War

அதில் 6 விமான ஊழியர்கள் மற்றும் 3 ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.