இலங்கையில் காலடி வைக்கும் ரஷ்யா!

0
310

இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ரஷ்ய ரொசாட்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித லியனகே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என ரஷ்யாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.