உக்ரைனின் முக்கிய இடத்தில் தாக்குதலை நடத்திய ரஷ்யா

0
584

மத்திய உக்ரேனிய நகரமான Kryvyi Rih மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் இன்று  தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக Kryvyi Rih இன் இராணுவ நிர்வாகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

உக்ரைனின் முக்கிய   இடத்தில் தாக்குதலை நடத்திய ரஷ்யா

கிழக்கு உக்ரைன் நகரமான செவெரோடோனெட்ஸ்கில் கடுமையான மோதல் இடம்பெற்று வரும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

Severodonetsk மற்றும் அதன் இரட்டை நகரமான Lysychansk ஆகியவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படுகின்றது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி முக்கிய பகுதிகள் இவை ஆகும், குறித்த இடங்கள் டான்பாஸ் மற்றும் அருகிலுள்ள டோனெட்ஸ்க் பகுதியுடன் இணைந்துள்ளன.