உக்ரைனின் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதை காண்பிக்கும் காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது குறித்து கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய கொடுரமான வீடியோவொன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுவதுடன் காலில் வெள்ளை நிற பட்டியணிந்தவர்களும் காணப்படுகின்றனர்.
அதேவேளை ரஸ்ய படையினர் காலில் வெள்ளை பட்டி அணிவது வழமை அவர்கள் ரஸ்ய மொழியில் உரையாடுகின்றனர்.
இந்நிலையில் கையில் பாரிய கத்தியை வைத்திருக்கும் காலில் வெள்ளை பட்டி அணிந்த நபர் மஞ்சள்பட்டி அணிந்த நபரின் தலையை துண்டிக்கின்றார்.
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான கிரெமினாவிற்கு அருகில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்ய படையினரின் கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.