அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.10,000 உயர்வு: தனியார் துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள்…!

0
203

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

தனியார் துறை சம்பளம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட முக்கிய தகவல் | Budget 2023 Sri Lanka President Election

அரச துறையினருக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் துறையினருக்கு எந்த ஒரு சலுகைகளும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வரவு செலவுத் திட்டம் என பலரும் விமர்சித்துள்ளனர்.