தென்னிலங்கை மாணவனுடன் காதல்; யாழில் பல்கலை யுவதி தற்கொலை

0
216

யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில் சாதியை காரணம் காட்டி காதலன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தற்கொலை முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி வீட்டின் பின் புறத்தில் இருந்த மாமரம் ஒன்றில் கயிற்றை கட்டி தொங்கிய போது அதனைப் பார்த்த அயல் வீட்டவர்கள் விரைந்து செயற்பட்டு யுவதியைக் காப்பாற்றிள்ளனர்.

University of Peradeniya

 சிங்கள மாணவருடன் காதல்

யாழ் நகர்ப்பகுதிக்கு அண்மையில் செயற்படும் வாகன சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரின் மகளான குறித்த யுவதி கண்டிப் பகுதியைச் சேர்ந்த அதே பீடத்தில் கற்கும் சிங்கள மாணவனைக் காதலித்துள்ளார்.

அத்துடன் மாணவனுடன் சேர்ந்து சமூகவலைத்தளங்களிலும் ஜோடியாக புகைப்படங்களையும் பதிவு செய்து வந்துள்ளார்.

Love

இந்நிலையில் கடந்த 20ம் திகதி யுவதி காதலித்து வந்த சிங்கள மாணவனின் பெற்றோர் யுவதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள். இருவரது திருமண விடயம் தொடர்பாக கதைக்கவே அவர்கள் வந்ததாகத் தெரியவருகின்றது.

மாணவி வசதியான குடும்பப் பின்னணியைச் சேர்ந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. மாணவனின் பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் ஒருவரும் சிநேகிதபூர்வமாக மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

தொடர்பை துண்டித்த காதலன்

அவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின்னர் மாணவியுடனான தொடர்பை மாணவன் முறித்துவிட்டார். அத்துடன் மாணவனது கட்டுப்பாட்டில் இருந்த மாணவியின் சமூகவலைத்தளங்களும் மாணவனால் முடக்கப்பட்டுள்ளது.

மாணவியின் காதலன் தொடர்பை துண்டித்த காரணத்தை மாணவி மற்றும் பெற்றோர், உறவுகள் அறிய முற்பட்ட போதே சாதிப் பாகுபாடு காரணமாக மாணவனின் பெற்றோர் யுவதியுடனான திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த விடயம் தெரியவந்துளளது.   இதன் பின்னணியிலேயே மாணவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  

Feeling