பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.
இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.
கடந்த வாரங்களில் இடம்பெற்ற பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது.
இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கிலும் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதிக் கொண்டனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த போட்டியாளர்களில் ஒருவராகவும் ஷிவின் திகழ்ந்து வருகிறார்.
தனது நிலைப்பாட்டை தொடர்ந்து சரியான பக்கத்தில் வைத்து வரும் ஷிவின், பலரின் சிறந்த போட்டியாளராகவும் உள்ளார்.
அப்படி ஒரு சூழலில், ஷிவினுக்கு ராபர்ட் மாஸ்டர் கொடுத்த தண்டனை தொடர்பான விடயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் கருத்துக்களை பெற்று வருகிறது.
இந்த வாரம் இடம்பெற்றுவரும் ராஜா ராணி டாஸ்க் மத்தியில், ஷிவினுக்கு தண்டனை கொடுக்கும் ராஜாவாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், மேக்கப் போடக் கூடாது எனவும் கூறி தனலட்சுமி உதவியுடன் ஷிவின் போட்டிருக்கும் மேக்கப்பையும் அழிக்க உத்தரவு போடுகிறார்.
இதேவேளை, உணவு உண்டு கொண்டிருக்கும் போது ஷிவின் முகத்தை போல, உணவு இருப்பதாகவும் சக போட்டியாளர்கள் மத்தியில் கூறுகிறார் ராபர்ட் மாஸ்டர்.
இப்படி ஷிவின் குறித்து வெளிப்படையாக ராபர்ட் மாஸ்டர் பேசும் விடயங்கள் பெரிய அளவில் சலசலப்பை பார்வையாளர்கள் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது.