மணிப்பூரில் மீண்டும் கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை!

0
359

மணிப்பூரில் நேற்றிரவு மீண்டும் வெடித்தக் வன்முறையினால் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்த மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை! | Violence Again Manipur 3 People Shot Dead

வன்முறையால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை! | Violence Again Manipur 3 People Shot Dead

எனினும், முன்னதாக மணிப்பூரில் 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, அஸ்ஸாம் ரைபிள்ஸின் அத்துமீறிச் செயலைக் கண்டித்து மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மீரா பைபிஸ், ஒகஸ்ட் 7ஆம் திகதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.