அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்த அமெரிக்கப் (US) பெண் ஒருவர், தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டிற்காக ஒரு தொகுதி படுக்கைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜேப் ஜாப்சன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். நன்கொடை அளிப்பதற்காக நடைபெற்ற விழாவில், அந்த பெண் மருத்துவமனையின் சேவைகள் குறித்து தனது பாராட்டுக்களை வழங்கியுள்ளார்.
அத்துடன், சிகிச்சையின் போது தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் புபுது ரணவீர மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவின் மருத்துவ நிபுணர்கள். நன்கொடையாக வழங்கப்பட்ட படுக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில், வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையை எடுத்துக் காட்டும் முகமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.