IMF இலங்கையிடம் கோரிக்கை!

0
111

 IMF திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து கடின உழைப்பின் மூலம் இலங்கை ஈட்டிய சாதனைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றைப் பேணுவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா தெரிவித்தார்.

வொஷிங்டனில் இடம்பெறும் வருடத்தின் மத்திய ஆண்டு மாநாட்டில் பங்குபற்றிய நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 15 ஆம் திகதி ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடத்தின் மத்திய ஆண்டு மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இணைந்துக் கொண்டுள்ளது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பரந்த பொருளாதார ஒத்துழைப்பில் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து இந் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி மற்றும் கடன் மறுசீரமைப்பை விரைவாக முடிப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.