புலம்பெயர் இலங்கையர்களுக்கு பொருளாதார நிபுணர் விடுத்த வேண்டுகோள்

0
624

இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவது, தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்கவே இதனை கூறியுள்ளார்.

எனவே சட்ட வழிகளில் மாத்திரம் தமது பணத்தை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது இலங்கை சார்பானவர்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.