வடிவேல் சுரேஷுக்கு ஆதரவு வழங்க தயார்: ஐக்கிய ஜனநாயக முன்னணி

0
121

ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியானது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்காக ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணியானது பொதுத்தேர்தலில் கார் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.