ரவி மோகன் சொத்து ஆவணங்களை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவு!

0
130

நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க சில தினங்களுக்கு முன்னர் புது தோழி கெனிஷா உடன் ஜோடியாக இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.

ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து இலங்கையை சேர்ந்த அமைச்சரை சந்தித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணைத்தில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யுனிவர்சல் சமீபத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. படம் நடிப்பதற்காக வாங்கிய 6 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பி தரவில்லை என ரவி மோகன் மீது அவர்கள் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து ரவி மோகன் அந்த நிறுவனம் மீது 9 கோடி நஷ்ட ஈடு கேட்டு எதிர் வழக்கு தொடர்த்திருந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில் ரவி மோகன் பணத்தை திருப்பி கொடுத்துவிடலாமே என நீதிபதி கூறி இருக்கிறார். ஆனால் அடுத்த படம் நடிக்கும்போது பணத்தை திருப்பி தருவதாக கூறினால் பாபி டச் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என ரவி மோகன் வழக்கறிஞர் கூறி இருக்கிறார்.

இந்த பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள மத்தியஸ்தர் நியமித்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் ரவி மோகன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அத்துடன் ரவி மோகன் 5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.