புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் பொறுப்பேற்பு

0
12

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று (14) பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

சமன் ஸ்ரீ ரத்நாயக்க அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் பதவி விலகுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.