ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் இக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.
