ரணில் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு – நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பற்றி உரையாடல்

0
29

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினரை சந்தத்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப் போது சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் உரையாடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் ப்கொழும்பு ளவர் வீதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் மனோ கணேசனுடன் கூட்டணி உறுப்பினர்களான வே. இராதாகிருஸ்ணன், பிரதித் தலைவர் திகாம்பரம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பது வழங்குவது தொடர்பாக நீண்ட நேரம் உரையாடல் இடம் பெற்றதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.