”ரணில் தான் மனிதன்”: நல்ல செய்தியை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது – பிரசன்ன ரணதுங்க

0
103

”ரணில்தான் மனிதன்” என்ற நல்ல செய்தியை முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார் .

“இதோ ஒரு நற்செய்தி“ எனும் தொனிப்பொருளில் பம்பலப்பிட்டியில் இன்று புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சவால்களை ஏற்றுக்கொள்ளும் திறமையால் மொட்டுக்கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உதவியது. மொட்டுக்கட்சியின் இந்த தீர்மானத்தை இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்களும் அங்கீகரித்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன் உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.