நாட்டு மக்களின் ஆதரவு தொடர்பில் ஜோதிட தகவலால் ரணில் அதிர்ச்சி..

0
261

ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு குறித்து பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல்

தேசிய மக்கள் கட்சியின் பொருளாதார கோட்பாட்டின் பிரதான எதிரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு...! ஜோதிட தகவலால் அதிர்ச்சியில் ரணில் | President Election Sri Lanka 2023

சஜித் பிரேமதாசவின் பொருளாதார திட்டத்திலும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார திட்டத்திலும் முரண்பாடுகள் உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிளவுபடுத்தி பொன்சேகாவுடன் இணைந்து வாக்குகளை பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.