கால அவகாசம் விதித்த ரணில்! பொறுமையுடன் காத்திருக்கின்றோம் என்கிறார் சுமந்திரன்

0
221

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

ரணில் விதித்த கால அவகாசம்

கால அவகாசம் விதித்த ரணில்! பொறுமையுடன் காத்திருக்கின்றோம் என்கிறார் சுமந்திரன் | Sumantran Warns Ranil

அது தொடர்பில் ஆராய்ந்து ஜூலை மாதத்தின் பின் உரிய நடவடிக்கை எடுப்பதற்கே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசம் விதித்துள்ளார்.

அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்கின்றோம். எமது பிரச்சினைக்கான தீர்வைத் தேடி நாம் இந்தியா செல்ல வேண்டிய தேவை இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.