ஜேர்மனியின் ஊடகங்களை விளாசித்தள்ளிய ரணில்

0
181

இலங்கை தொடர்பிலான மேற்கத்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியின் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க,

“நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் இரண்டாம் தரம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த மேற்கத்திய அணுகுமுறையை நீங்கள் அகற்ற வேண்டும். நீங்கள் அதை நிறுத்துங்கள். நான் அதை நிறுத்துகிறேன். நாங்கள் வெளியேறுகிறோம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.