மீண்டும் யாழ்ப்பாணம் வந்த ரம்பா: அடுத்தடுத்து படையெடுக்கவுள்ள திரைப்பிரபலங்கள்

0
301

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர் இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

நோர்த் யுனியின் (NORTHERN UNI) ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்தது.

எனினும் அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பெப்ரவரி 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமனா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், புகழ், பாலா உள்ளிட்ட பல கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.