இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள ராஜீவ் காந்தி கொலைவழக்கு நபர்கள்!

0
573

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் (ஸ்ரீஹரன்), ராபர்ட் பயஸ், எஸ் ஜெயக்குமார் மற்றும் டி சுதேந்திரராஜா என்ற சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப தமிழக அரசுக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி வழக்கு ; இலங்கையர்கள் நாட்டுக்கு | Rajiv Gandhi Murder Case

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் கைதானவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் , கடந்தவாரம் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.