நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலைக்காரன். கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.பாலசந்தர் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க ரஜினி சம்பளம் வாங்கவில்லை என தெரியுமா?
ஆம்! வேலைக்காரன் வெளியாவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1985ல் வெளியான ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தையும் ரஜினியின் குருநாதரான கே.பாலசந்தர் தான் தயாரித்திருந்தார். ஸ்ரீராகவேந்திரா படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதை ஈடுசெய்யும் விதமாக வேலைக்காரன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், அதற்காக சம்பளமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
