Home India புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் – ஆலோசகராக க.சண்முகம் நியமனம்

புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் – ஆலோசகராக க.சண்முகம் நியமனம்

0
புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் – ஆலோசகராக க.சண்முகம் நியமனம்

தமிழகத்தின் தலைமைச் செயலர் க.சண்முகம் இன்று ஓய்வுப்பெறுவதை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளில் முதலில் இருந்த ராஜீவ் ரஞ்சன் அயல்பணியில் இருந்தார். இந்நிலையில் சண்முகம் ஓய்வை அடுத்து சீனியர் ஐஏஸ் அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் 47-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் மத்திய அரசு அயல்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

தர்போது தலைமைச் செயலராக இருந்து ஓய்வுபெறும் க.சண்முகத்தின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவரை தமிழக அரசின் ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.