ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திக்கும் போது இயர்போனை காதில் மாட்டத் தெரியாததால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shebaz Sharif) தவிக்கும் நிலை ஏற்பட்டது.
உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் (Shebaz Sharif) புடினுடன் (Vladimir Putin) பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தனது காதில் இயர்போனை மாட்டத் தெரியாமல் சிறிது நேரம் தடுமாறிய ஷெரீப் (Shebaz Sharif) தனக்கு யாராவது உதவ முடியுமா? என்று கேட்டார்.
இதனையடுத்து அங்கிருந்த அதிகாரி ஒருவர் ஷெரீப்பின் (Shebaz Sharif) காதில் இயர்போனை பொருத்திய நிலையில் அவர் பேசத் தொடங்கியதும் இயர்போன் மீண்டும் கீழே விழுந்தது.

இதனை பார்த்துக்கொண்டிருந்த புடின் (Vladimir Putin) சிரித்துக் கொண்டே தனது காதில் இருந்த இயர்போனை எடுத்து வேடிக்கையாக பார்த்தார்.