ட்ரம்பை புகழ்ந்து தள்ளும் புடின், நெதன்யாகு

0
24

அமைதிக்காக டொனால்ட் ட்ரம்ப் நிறைய விடயங்களை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். இந்நிலையில் உலகில் சமாதானத்தை மேம்படுத்துவதற்குப் பெரும் பங்களிப்பை ட்ரம்ப் செய்துள்ளார்.

ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிப்பது அவரது தனிச்சிறப்பு அல்ல. காசாவில் அமைதி உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்று புடின் கூறியுள்ளார்.

இதேவேளை நோபல் குழு அமைதியைப் பற்றிப் பேசுகிறது. அதேபோல் ட்ரம்ப் அதைச் சாத்தியமாக்கியுள்ளார் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.