அமெரிக்காவை எதிர்த்து கொழும்பில் வெடித்த ஆர்ப்பாட்டம்

0
39

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இன்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோஷலிச கட்சியினரால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. வென்சுவேலாவை தொடாதே, அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்து உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர்.

வெனிசுவேலாவின் இறையாண்மை மற்றும் அதன் மீதான அமெரிக்காவின் தலையீடு குறித்த உலகளாவிய ரீதியில் விவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.