யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (11) பி.ப 4.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று ( 12) புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும் என கூறப்படும் நிலையில் போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளனர்.






