அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் முன்மொழிவுகள் இன்று சபாநாயகரிடம் ஒப்படைப்பு

0
402

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சில முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அமர்வுகள் ஆரம்பமாகிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக இயங்கும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த முன்மொழிவுகள் அனைத்தும் சட்ட மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.