இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்காக வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட முன்மொழிவுகள்

0
186

இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கும் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாக வடிவமைக்கப்பட்ட 10 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வெரிட்டே

ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னதாக குறித்த முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பில் இது தொடர்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட ஐந்து முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவையாவன :

1. தடுத்து வைத்தல் வரி விகிதங்களை தற்போதுள்ள ஐந்து வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்துதல்.

இந்த முன்மொழிவின் மூலம் மேலதிகமாக 90 பில்லியன் ரூபாவை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. சிகரெட் வரிகளை அட்டவணைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட பகுத்தறிவு சூத்திரத்தை ஏற்றுக்கொள்ளல்.

இம்முன்மொழிவு மூலம் 35 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சீனி வரி குறைப்பை இரத்து செய்து, வரி மாற்றங்களைச் செய்வதில் நிர்வாக அதிகாரத்தை நீக்குதல் – சிறப்பு பண்டங்களுக்கான வரிச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் அளவு.

இதன் மூலம் 25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்ட முடியும்.

2024 Budget

4. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியாக சுட்டெண்ணப்பட்ட சூத்திரத்திற்கு மேலாக அதிகரித்த விலையை அமுல்படுத்துவதற்கு பதிலாக, முழுத் தொழிற்துறையின் மீதும் அதிகரிக்கப்பட்ட வரியின் ஊடாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்படும் அதிகப்படியான செலவினங்களை மீளப்பெறுதல்.

இதன் மூலம் போட்டித் தயாரிப்புகளிலிருந்து வசூலிக்கப்படும் மேலதிக வரிகள் மூலம் சுமார் 25 பில்லியன் ரூபாயை ஈட்டிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. சொத்து வரிகளை மதிப்பிடுவதற்கும் வசூலிப்பதற்கும் விவரிக்கப்பட்ட முறையை அமுல்படுத்துதல்

குறித்த முன்மொழிவு மூலம் வரி வசூலை 17 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கருத்தரங்கில் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதை நோக்கமாக கொண்ட ஐந்து முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.